தேர்தல் 2024 | வாக்கு எண்ணிக்கை | 11 மணி நிலவரப்படி அதிமுக எங்கெல்லாம் முன்னிலை வகிக்கிறது?

தமிழகத்தில் 10 மணி நிலவரப்படி, அதிமுக மொத்தம் மூன்று இடங்களில் முன்னிலை வகித்தது. இந்நிலையில் 11 மணி நிலவரப்படி, ஒரேயொரு இடத்தில் மட்டுமே அதிமுக முன்னிலை வகிக்கிறது. அது எந்த இடம்? பார்க்கலாம்...
விஜய பிரபாகரன்
விஜய பிரபாகரன்pt web

18 ஆவது மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைப்பெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில், தபால் வாக்குகள் முடிவடைந்தது. இந்நிலையில், தற்போது, மின்னணு வாக்கு இயந்திரங்களின் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

அந்தவகையில், தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் அதிமுகவின் தற்போதையை முன்னிலை நிலவரம் என்ன என்பதை காணலாம். அதிமுகவானது தேமுதிக, புதிய தமிழகம், SDPI, புரட்சி பாரதம், அகில இந்திய பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வகித்துள்ளது.

விஜய பிரபாகரன்
மக்களவை தேர்தல் 2024 | வடசென்னை தொகுதியில் வெற்றி யாருக்கு? களநிலவரம் என்ன?

இந்நிலையில், தமிழகத்தில் 10 மணி நிலவரப்படி, அதிமுக மொத்தம் மூன்று இடங்களில் முன்னிலை வகித்தது.

நாமக்கல் மக்களவை தொகுதி (10 மணி நிலவரப்படி)

அதிமுக 29,760 - எஸ் தமிழ்மணி

கொமதேக 22,632 - வி.எஸ் மாதேஸ்வரன்

பாஜக 2580 - கே.பி.ராமலிங்கம்

நாதக 1,602 - கே.கனிமொழி

பிற - 362

கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதி (10 மணி நிலவரப்படி)

அதிமுக 19,761 - குமரகுரு

திமுக 19,362 - தே.மலையரசன்

பாமக 2,021 - ரா. தேவதாஸ்

நாதக 1450 - ஆ. ஜெகதீஸ்சன்

பிற 44

விருதுநகர் மக்களவை தொகுதி (10 மணி நிலவரப்படி)

தேமுதிக - விஜய பிரபாகர் 6,532

காங்கிரஸ் - மாணிக்கம் தாகூர் - 6,236

ராதிகா சரத்குமார் - பாஜக - 2,553

நாதக கௌசிக் - 1,615

இதேநிலையில் 11 மணி அளவில் அப்படியே மாறியுள்ளது. அதன்படி,

நாமக்கல் மற்றும் கள்ளக்குறிச்சி தொகுதிகளில் அதிமுக சொற்ப வாக்கு வித்தியாசத்தில் இரண்டாமிடத்துக்கு வந்துவிட்டன. அந்த இரு இடங்களிலும் திமுக கூட்டணி முதல் இடத்தில் உள்ளது. அதிமுக கூட்டணியில் தேமுதிக மட்டும் விருதுநகர் தொகுதியில் முன்னிலையில் உள்ளது. அங்கு விஜய பிரபாகரன் சுமார் 37,000 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங். வேட்பாளர் மாணிக் தாகூர் 35,000 வாக்குகள் அளவில் பெற்றிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com