திண்டுக்கல்: “ஆகாயத் தாமரையால் குளத்திற்கு கேடு; பாஜக தாமரையால் நாட்டுக்கே கேடு” - நடிகர் கருணாஸ்

“படர்தாமரை உடலுக்கு கேடு; ஆகாயத் தாமரை குளத்திற்கு கேடு; பிஜேபியின் தாமரை இந்திய நாட்டுக்கே கேடு” என தேர்தல் பரப்புரையில், முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ் பேசினார்.
Actor Karunas
Actor Karunaspt desk

செய்தியாளர்: ரமேஷ்

திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் I.N.D.I.A. கூட்டணி சார்பாக போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து நேற்று மாலை நிலக்கேட்டை சட்டமன்றத் தொகுதியில், முக்குலத்தோர் புலிப்படை நிறுவனத் தலைவர் நடிகர் கருணாஸ் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பள்ளபட்டி, அணைப்பட்டி, விறுவீடு உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

தேர்தல் பரப்புரையில் கருணாஸ்
தேர்தல் பரப்புரையில் கருணாஸ்

அப்போது பேசிய அவர்... “ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம் என இந்திய மக்களிடையே மோடி பிரிவினையை ஏற்படுத்த நினைக்கிறார். வாய்ப்பில்ல ராஜா... ஒருபோதும் வாய்ப்பில்லை. படர்தாமரை உடலுக்கு கேடு, ஆகாயத் தாமரை குளத்திற்கு கேடு, பிஜேபியின் தாமரை இந்திய நாட்டிற்கே கேடு. எனவே பிஜேபி மீண்டும் ஆட்சிக்கு வர ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

Actor Karunas
வேங்கைவயல் விவகாரம்: குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் சிக்கல் - தேர்தலை புறக்கணிக்கப் போவதாக பதாகை!

உலகில் பொய் சொல்கிறவர்களிடையே போட்டி வைத்தால் முதல் இடத்தில் மோடியும் இரண்டாவது இடத்தில் அண்ணாமலையும் இருப்பார்கள். இவர்கள் வாயால் சுட்ட வடைகள் கொஞ்சம் நஞ்சமல்ல” என குற்றம் சாட்டினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com