எம்ஜிஆர் மருத்துவக் கல்லூரி துணைவேந்தர் கீதாலட்சுமி வருமான வரித்துறை முன்பு ஆஜராகி உள்ளார். அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது.
எம்ஜிஆர் மருத்துவக் கல்லூரி துணைவேந்தர் கீதாலட்சுமி வீட்டில் கடந்த 7-ஆம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அவருக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்தனர். இதனிடையே, வருமான வரித்துறையினர் சம்மனுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கீதாலட்சுமி மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, வருமான வரித்துறையினரின் சம்மனை ரத்து செய்ய முடியாது என உயர்நீதிமன்றம் கூறிவிட்டது.
இந்நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் முன் கீதாலட்சுமி இன்று ஆஜராகி உள்ளார். அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.