திருவாரூர்: மூடப்பட்ட எண்ணெய் கிணற்றில் இருந்து வெளியேறும் கேஸ்..அச்சத்தில் காரியமங்கலம் கிராமமக்கள்

காரியமங்கலம் கிராமத்தில் ஒ.என்.ஜி.சி கிணறுகளில் இருந்து கேஸ் வெளியாவதால் அந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் விக்கிரபாண்டியம் ஊராட்சி காரியமங்கலம் கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் இரண்டு எண்ணெய் கிணறுகள் அமைத்து ஹைட்ரோ கார்பன் எடுத்து வந்தது. இந்த நிலையில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் பணிகள் நிறைவடைந்து இரண்டு எண்ணெய் கிணறுகளும் மூடப்பட்டன.

ONGC
ONGCpt desk

இந்நிலையில், மூடப்பட்ட எண்ணெய் கிணற்றிலிருந்து அதிகளவில் கேஸ் வெளியேறி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எந்த நேரத்திலும் விபத்து ஏற்படும் சூழல் நிலவுவதால் உடனடியாக ஓஎன்ஜிசி அதிகாரிகள் கேஸ் வெளியேறும் பகுதியை சரிசெய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com