\
விஷவாயு தாக்கி மூவர் உயிரிழப்பு: துப்புரவு ஆணைய அதிகாரிகள் விசாரணை

விஷவாயு தாக்கி மூவர் உயிரிழப்பு: துப்புரவு ஆணைய அதிகாரிகள் விசாரணை

விஷவாயு தாக்கி மூவர் உயிரிழப்பு: துப்புரவு ஆணைய அதிகாரிகள் விசாரணை
Published on

கோவை ஆர்.எஸ்.புரத்தில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த நகைப்பட்டறையில் தேசிய துப்புரவு ஆணையத்தினர் ஆய்வு மேற்கொண்டனர்.

கடந்த 22ஆம் தேதி ஆர்.எஸ்.புரம் நகைப்பட்டறையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது 3 பேர் உயிரிழந்தனர். ரவி சங்கர் என்பவரின் நகைப்பட்டறையில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. தேவையான உபகரணங்களை தராமல் இதுபோன்ற பணிகளில் தொழிலாளர்களை ஈடுபடுத்தியதற்கான நகைப்பட்டறை உரிமையாளர் கைது செய்யப்பட்டார். அவர்களின் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக டெல்லியிலிருந்து வந்த தேசிய துப்புரவு ஆணையத்தைச் சேர்ந்தவர்கள் நிகழ்விடத்தில் இன்று காலை ஆய்வு செய்தனர். மேலும், பணியில் ஈடுப்பட்டபோது தொழிலாளர்கள் அணிந்திருந்த உடை, பயன்படுத்திய உபகரணங்களும் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடமும் அந்தக்குழு விசாரணை நடத்தியது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com