\
Insta Influencers
Insta InfluencersPT

பூண்டு மிளகு குழம்பு விவகாரம்! பொங்கிய இன்ஸ்டா பிரபலங்கள்! மணி ப்ரோ-க்கு வந்த ஆபத்து?

பூண்டு மிளகு குழம்பு விவகாரத்தில் பெண் இன்ஸ்டா பிரபலங்கள் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்கள்.
Published on
Summary

பூண்டு மிளகு குழம்பு டிரெண்டால் இன்ஸ்டா இன்புளுயன்சர்கள் ஆன்லைனில் விற்பனை செய்து வைரலாகிய நிலையில், விமர்சன வீடியோக்களால் பிரபலமான மணி ப்ரோ என்ற மணிகண்டன், பெண்கள் மீது ஆபாசமாக தனிநபர் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட இன்புளுயன்சர்கள் சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்து, தங்கள் தொழில் சட்டபூர்வம், தரச் சான்றிதழ்களுடன் நடைபெறுகிறது என விளக்கினர்.

செய்தியாளர் - கார்த்திகேயன்

இன்று சமைத்த உணவை இன்றே சாப்பிட்ட காலம் மாறி, பாக்கெட் உணவுகளுக்கு பொதுமக்கள் பலரும் தொடர்ந்து அடிமையாகி வருகின்றனர். இதுமாதிரியான உணவுகள் வேலையை எளிதில் முடித்துவிடுவதாலும், சுவையும் சிறப்பாக இருப்பதாலும் பொதுமக்கள் பலரும், இதுமாதிரியான பேக்கட் உணவுகளை அதிகம் நம்பியிருக்கின்றனர். மக்களின் இந்த மனநிலையை புரிந்துக் கொண்டு, பூண்டு மிளகு குழம்பு என்ற உணவுப் பொருள், சமீபத்தில் டிரெண்ட் ஆனது.

இந்த குழம்பை எப்படி செய்வது எனஇன்ஸ்டா பிரபலங்கள், இதனை ஆன்லைனில் விற்பனை செய்தும் வந்தனர். இந்த வீடியோக்கள் வைரலானதைத் தொடர்ந்து, பலரும் இந்த பூண்டு மிளகு குழம்பு பாட்டில்களை ஆன்லைனில் வாங்கத் தொடங்கினர். இதற்கிடையே, விமர்சன வீடியோக்கள் வெளியிட்டு ஆன்லைனில் பிரபலமான மணி ப்ரோ என்று அழைக்கப்படும் இன்ஸ்டாகிாம் பிரபலம் ஒருவர், இன்ஸ்டாபிரபலங்கள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

Insta Influencers
Insta InfluencersPT

மேலும், அந்த வீடியோக்களில் இடம்பெற்ற பெண் இன்புளுயன்சர்கள் குறித்து, தனிநபர் விமர்சனங்களை முன்வைத்தார். இப்படியான சூழ்நிலையில், விமர்சனங்களை சந்தித்த பெண் இன்புளுயன்சர்கள், சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர். இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், மணிகண்டன் என்ற நபர், தங்கள் மீது ஆபாசமான விமர்சனங்களை முன்வைத்ததாக கூறியுள்ளனர்.

மேலும், உங்களுக்கு ஒரு பொருள் பிடிக்கவில்லை என்றால், வாங்க வேண்டாம். விமர்சனம் இருந்தால், காவல்துறையில் புகார் அளிக்கலாம். ஆனால், இப்படி தனிநபர் தாக்குதல்களை நடத்தக் கூடாது என்றும் தெரிவித்தனர். தொடர்ந்து பேசிய அவர்கள், எங்களிடம் அனைத்து உணவு தரச் சான்றிதழ்களும் உள்ளது. முறையாக தான் நாங்கள் தொழில் நடத்தி வருகிறோம் என்றும் கூறியுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com