சென்னையில் குப்பை கொட்டுவதற்கு அறிவிக்கப்பட்ட கட்டண வசூல் நிறுத்தம்

சென்னையில் குப்பை கொட்டுவதற்கு அறிவிக்கப்பட்ட கட்டண வசூல் நிறுத்தம்
சென்னையில் குப்பை கொட்டுவதற்கு அறிவிக்கப்பட்ட கட்டண வசூல் நிறுத்தம்

முதலமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் சென்னையில் குப்பை கொட்டுவதற்கான கட்டணம் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசு வழிகாட்டுதல் படி திடக்கழிவு மேலாண்மைக்கான கழிவு உருவாக்குபவர்கள் வகைப்படுத்தப்பட்டு அதற்கேற்ப கட்டணத்தை பயணாளர்கள் சென்னை மாநகராட்சிக்கு கட்ட வேண்டும் எனவும் இதற்கான கட்டணத்தை சொத்துவரியுடன் சேர்த்து வசூலிக்கப்படும் எனவும் மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக திடக்கழிவு மேலாண்மைக்கான பயணாளர் கட்டணத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் பல்வேறு குடியிருப்பு நலசங்க பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டனர். எனவே முதலமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் சென்னையில் குப்பை கொட்டுவதற்கான கட்டணம் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சென்னையில் குப்பை வசூல் கட்டணம் குறித்த அறிவிப்பிற்கு பொதுமக்கள் மற்றும் எதிர்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com