நாகையில் தொடர்ந்து எரியும் குப்பைக்கிடங்கு: மக்கள் அவதி
நாகை மாவட்டம் நாகூர் பகுதியில் தொற்று நோய் உருவாக்கும் குப்பைக் கிடங்கை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகையில் எந்நேரமும் எரிந்துகொண்டே இருக்கும் நாகூர் குப்பைக் கிடங்கை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்கு அருகாமையிலேயே குப்பைக் கிடங்கு இருப்பதால் நோய் தோற்று ஏற்படுவதாக நாகூர் வாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், இறைச்சி கழிவுகள் மருத்துவக் கழிவுகள் என அனைத்தையும் அங்கு கொட்டுவதால் எந்நேரமும் துருநாற்றம் வீசுவதாக புகார் எழுந்துள்ளது.
அங்கு கொட்டப்படும் கழிவுகள் அனைத்தும் அருகாமையில் உள்ள வெட்டாற்றில் கலப்பதால் மீன் வளம் கடுமையாகப் பாதிக்கபடுவதாக மீனவர்கள் கூறுகிறார்கள். எந்நேரமும் எரிந்துகொண்டே இருப்பதால் குழந்தைகள் முதியவர்கள் என அனைவரும் பாதிக்கபடுவதால் குப்பைக் கிடங்கை அகற்ற நாகை நகராட்சியிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.