செங்கல்பட்டு: பயணிகள் ரயிலில் கேட்பாரற்று கிடந்த பை - சோதனையில் சிக்கிய கஞ்சா

செங்கல்பட்டு: பயணிகள் ரயிலில் கேட்பாரற்று கிடந்த பை - சோதனையில் சிக்கிய கஞ்சா

செங்கல்பட்டு: பயணிகள் ரயிலில் கேட்பாரற்று கிடந்த பை - சோதனையில் சிக்கிய கஞ்சா

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகளை சோதனை செய்தபோது 9 கிலோவை கஞ்சா கடத்தி வந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

ஆந்திர மாநிலம் காச்சிக்கூடாவில் இருந்து வந்த சர்க்கார் எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு வந்தது. இந்நிலையில் வழக்கம்போல ரயில்வே பாதுகாப்பு படையினர் ரயிலின் அனைத்து பெட்டிகளையும் சோதனையிட்டனர்.

அப்போது முன்பதிவில்லாத ஒரு ரயில் பெட்டியின் இருக்கைக்கு அடியில் கேட்பாரற்று சிவப்பு பை ஒன்று கிடந்துள்ளது. அதை கண்ட ரயில்வே காவலர் அந்தப் பையை ரயில்வே காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்று திறந்து பார்த்தபோது அதில், 3 கிலோ வீதம் மூன்று கஞ்சா பண்டல்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார், அதை காஞ்சிபுரம் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் ஒப்படைத்தனர். கடத்தல் கும்பல் யார்? இந்த கஞ்சாவை எங்கு கொண்டு செல்வதற்காக கடத்தப்பட்டது என்பதை ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com