
காங்கேயம் அருகே கார் மீது சிமெண்ட் லாரி மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள பரஞ்சேருழி பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (37). காங்கேயத்தில் மெடிக்கல் நடத்தி வரும் இவர், தனது உறவினரான கோவையைச் சேர்ந்த ராமன் (38). இவரது மனைவி உமாவதி (33), உமாவதியின் தாயார் மணி (55) ஆகியோர் இன்று காலை பரஞ்சேருழியில் இருந்து திருமண விழாவிற்கு நான்கு பேரும் காரில் சென்றுள்ளனர்.
அப்போது காங்கேயம் சென்னிமலை சாலையில் திட்டுப்பாறை அருகே சென்றபோது எதிரே வந்த சிமெண்ட் டேங்கர் லாரி கார் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த விஸ்வநாதன், ராமன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மணியை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். உமாவதி பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காங்கேயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.