மதிமுகவில் இருந்து விலகி திமுகவில்தான் இருக்கிறேன் - எம்.பி கணேச மூர்த்தி நீதிமன்றத்தில் தகவல்

மதிமுகவில் இருந்து விலகி திமுகவில்தான் இருக்கிறேன் - எம்.பி கணேச மூர்த்தி நீதிமன்றத்தில் தகவல்
மதிமுகவில் இருந்து விலகி திமுகவில்தான் இருக்கிறேன் - எம்.பி கணேச மூர்த்தி நீதிமன்றத்தில் தகவல்

மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் உறுப்பினராக உள்ளதாக ஈரோடு எம்.பி., கணேச மூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தேர்தல்களில் கூட்டணிக் கட்சிகளின் சின்னத்தில், தோழமைக் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட தடை விதிக்கக்கோரி தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் எம்.எல்.ரவி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், "சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தி.மு.க., சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெரம்பலூர் எம்.பி., பாரிவேந்தர், விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார், நாமக்கல் எம்.பி., சின்ராஜ், ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி ஆகியோரின் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும்" என கோரியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், மனுவுக்கு பதிலளிக்கும்படி, தேர்தல் ஆணையத்திற்கும் திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நான்கு தோழமை கட்சிகளின் எம்.பி.,க்களுக்கும் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, ஈரோடு எம்.பி., கணேச மூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனுவைத் தாக்கல் செய்துள்ளார். 

அதில், ம.தி.மு.க.,உறுப்பினர் பதவியில் இருந்து விலகாமல் தி.மு.க., சின்னத்தில் போட்டியிட்டதாக கூறுவது தவறு எனவும், ம.தி.மு.க.,வில் இருந்து விலகி, தி.மு.க.,வில் சேர்ந்த பிறகே ஈரோடு தொகுதி வேட்பாளராக தான் அறிவிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.  தற்போது தி.மு.க., உறுப்பினராக உள்ளதாகவும், மக்களவையில் தன்னை தி.மு.க., உறுப்பினராகவே சபாநாயகர் அங்கீகரிப்பதாகவும், தி.மு.க., கொறடா தான் தனக்கு பேசுவதற்கு நேரம் ஒதுக்குவதாகவும் அந்த பதில்மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கூட்டணி கட்சி சின்னங்களில் வேட்பாளர்கள் போட்டியிடுவதை தடுப்பதில் மனுதாரருக்கு அக்கறை இருந்தால், அவர் மக்களவை உறுப்பினர்களை அணுகலாம் எனவும் ஒற்றை குடிமகன் தன் விருப்பத்தை நீதிமன்றத்தின் மூலம் நிறைவேற்ற முடியாது எனவும் அந்த பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com