காந்தியின் வார்த்தைகள் நமக்குத் தேவையான வலிமையை வழங்கும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
'முதலில் உங்களை உதாசீனப்படுத்துவார்கள், பின்னர் உங்களைப் பார்த்து நகைப்பார்கள், பின்னர் உங்களோடு சண்டையிடுவார்கள். பின்னர் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்' என்ற மகாத்மாவின் வார்த்தைகளை ட்விட்டரில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன் அந்த பதிவில் காந்தியின் வார்த்தைகள் நமக்குத் தேவையான வலிமையை வழங்கும் என்று குறிப்பிட்டுள்ளார். தேசப்பிதா மகாத்மா காந்தியின் 149வது பிறந்தநாள் நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.