கஜா புயலால் பறிபோன பசுமை... மீட்டெடுக்க புதுக்கோட்டை இளைஞர்கள் புதிய முயற்சி

கஜா புயலால் பறிபோன பசுமை... மீட்டெடுக்க புதுக்கோட்டை இளைஞர்கள் புதிய முயற்சி
கஜா புயலால் பறிபோன பசுமை... மீட்டெடுக்க புதுக்கோட்டை இளைஞர்கள் புதிய முயற்சி

கஜா புயலால் இழந்த பசுமையை மீட்க புதுக்கோட்டை மாவட்ட இளைஞர்கள் மேற்கொண்ட நடவடிக்கை அனைவரையும் ஈர்த்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயலால் பெரிதளவில் பாதிக்கப்பட்டது. இதில் தென்னை உள்ளிட்ட பல லட்சம் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் அவற்றை நம்பியிருந்த விவசாயிகள் பெரும் இன்னலுக்கு உள்ளாகினர். இதனிடையே கஜா புயலால் இழந்த பசுமையை மீட்க அக்கிராமத்து இளைஞர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் இணைந்து பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதன் ஒரு முயற்சியாக அன்னவாசல் அருகே உள்ள வீரபெருமாள்பட்டி, அகரப்பட்டி, வேலாம்பட்டி, புங்கினிப்பட்டி, மண்ணவேளாம்பட்டி உள்ளிட்ட 32 கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து ‘பசுமை அறக்கட்டளை 32’ என்ற அமைப்பை உருவாக்கி உள்ளனர். இந்த அமைப்பின் மூலம் கடந்த ஓராண்டு காலமாக அப்பகுதி கிராமங்களில் புதிய மரக்கன்றுகளை நடவுசெய்து, அதனை முறையாக பராமரித்து வருகின்றனர்.

இதுவரை 19 கிராமங்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளனர். இந்த அமைப்பினர் களமிறங்கி வேலை செய்வது ஒருபுறம் எனில் ‌வெளிநாடுகளில் உள்ள 270 இளைஞர்கள் நிதி உதவி செய்து இவர்களுக்கு கை கொடுத்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com