கஜா புயல் ஆய்வுக்காக நாகை புறப்பட்டார் முதலமைச்சர்
கஜா புயல் பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்ய முதலமைச்சர் பழனிசாமி சென்னையிலுருந்து நாகை புறப்பட்டார்.
கஜா புயல் நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொள்கிறார். இதற்காக தற்போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து நாகை விரைவு ரயிலில் அவர் புறப்பட்டுள்ளார். நாளை காலை அவர் நாகைப்பட்டினம் சென்றடைவார். பின்னர் நாளை காலை 8 மணிக்கு நாகப்பட்டினத்தில் அவர் ஆய்வை தொடங்குகிறார். பிரதாப ராமபுரம், வேட்டைக்காரனிருப்பு, புஷ்பவனம், வேதாரண்யம் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்யும் முதல்வர், பிற்பகலில் திருவாரூர் மாவட்டத்தில் ஆய்வு செய்கிறார்.
கடந்த 20ஆம் தேதி தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் முதல்வர் ஆய்வு செய்தார். கடந்த முறை முதல்வர் பழனிசாமி ஹெலிகாப்டரில் சென்றது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்த முறை சாலை மார்க்கமாக அவர் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.