கஜா பாதிப்பு: நள்ளிரவு முதல் மீட்பு பணிகள், முகாம்களில் 81 ஆயிரம் பேர்!

கஜா பாதிப்பு: நள்ளிரவு முதல் மீட்பு பணிகள், முகாம்களில் 81 ஆயிரம் பேர்!

கஜா பாதிப்பு: நள்ளிரவு முதல் மீட்பு பணிகள், முகாம்களில் 81 ஆயிரம் பேர்!
Published on

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இரவு முதல் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் தெரிவித்துள்ளார். 

கஜா புயலின் கண்பகுதி நாகை வேதாரண்யம் இடையே முழுமையாக கடந்துவிட்டது. இதன் காரணமாக நாகை, கடலூர், காரைக்கால், திருவாரூர் மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டியது. புயல் கரையை கடக்கத் தொடங்கிய போது புதுச்சேரியில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. வேதாரண்யம், நாகை, கடலூர் உள்ளிட்ட இடங்களில் 100 முதல் 130 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் சூறைக்காற்று வீசியது. அதிகாலை 2 மணியளவில் கஜா புயலின் கண் பகுதி கரையை கடந்த பின், காற்றின் வேகம் அதிகரித்தது. 

கடலூர், நாகை, காரைக்கால், திருவாரூரில் பெரும்பால பகுதிகளில் சூறைக்காற்றால் ஏராளமான மரங்கள் சாய்ந்தன. இதேபோல் மின்கம்பங்க ளும் சேதமடைந்தன. காரைக்காலில் மின்மாற்றி மீது மரம் சாய்ந்து விழுந்ததில் மின்மாற்றி வெடித்துச் சிதறியது. இதனால் 6 மாவட்டங்க ளிலும் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன் தொலைதொடர்பும் பாதிக்கப்பட்டது. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த சுமார் 81‌ ஆயிரம் பேர் அரசு சார்பில் அமைக்கப்பட்டிருந்த முகாம் களில் தங்கவைக்கப்பட்டனர்.

இதுபற்றி வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து புதிய தலைமுறைக்கு பேசியபோது, இதுவரை 461 நிவாரண முகாம்களில் 81 ஆயிரத்து 698 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் முறையான அறிவிப்பு வெளியான பின்னர் பொதுமக்கள் வீடுகளைவிட்டு வெளியே வரவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். புயல் பாதிப்பு குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மூலம் நிலவரங்களை தொடர்ந்து சேகரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் புதிய தலைமுறையிடம் சத்தியகோபால் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com