கஜா புயல்: போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணி..!

கஜா புயல்: போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணி..!

கஜா புயல்: போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணி..!
Published on

கஜா புயலால் சாய்ந்த 25 ஆயிரத்து மேற்பட்ட மின் கம்பங்களை போர்க்கால அடிப்படையில் சீரமைக்கும் பணியில் தமிழக மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

‘கஜா’ புயல் நாகை, தஞ்சை, திரு‌வாரூர் என 6 மாவட்டங்களை புரட்டிப்போட்டுச் சென்றிருக்கிறது. கோரத் தாண்டவமாடிய ‘கஜா’ புயலில் அதிகம் பாதிப்புக்கு ஆளானது நாகை மாவட்டம் வேதாரண்யம் தான். இந்தப் புயலின் தாக்கத்தால், வேதாரண்யம் தனித் தீவாகவே மாறியுள்ளது.‘கஜா’ புயல் கரையைக் கடக்கும் போது 110 கிமீ வேகத்தில் காற்று வீசியது. கஜா புயல் தாக்கியதில் பல்வேறு மாவட்டங்களில் 25 ஆயிரத்து மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களும் சாய்ந்திருக்கின்றன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இந்தக் கடுமையான புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்துள்ளோரின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.  இந்தச் சுழலில் புயலால் சாய்ந்த மின் கம்பங்கள் மற்றும் மரங்களை அகற்றும் பணி தீவரமாக நடைபெற்று வருகிறது.

கஜா புயலால் திருவாரூர் மாவட்டத்தில் 5 ஆயிரம் மின் கம்பங்கள் மற்றும் 28 ஆயிரத்து 500 மரங்கள் சாய்ந்துள்ளன. மின் கம்பங்களை சரி செய்வதற்காக திருச்சி உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். .இதுவரை 6,500 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன, மரத்தை அப்புறப்படுத்தும் பணிகள் முனைப்பாக நடைபெற்று வருகிறது. இதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் ஆயிரத்து 500 மின்கம்பங்களும் 40 டிரான்ஸ்பார்மர்களும், சேதமடைந்துள்ளன. மேலும் இந்த புயலால் ஆயிரத்து 141 மரங்கள் சாய்ந்துள்ளன. நிவாரண பணியில் மாவட்டம் முழுவதும் 81 குழுக்களாக ஆயிரத்து 110 பேர் பணயில் ஈடுபட்டுள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் சுமார் 5,000 மின்கம்பங்கள் கீழே விழுந்துள்ளதாகவும் ஓரிரு நாட்களில் இவை சரி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரம் மரங்கள் புயலினால் கீழே விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் கஜா புயலின் காரணமாக சுமார் 50 மின் கம்பங்கள் கீழே விழுந்துள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் கஜா புயலின் தாக்குதலினால் மாவட்டம் முழுவதிலும் சுமார் 280 மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. இதற்காக சுமார் 200 மின் வாரிய பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் 527 மரங்கள் புயல் காற்றில் சாய்ந்துள்ளது.

மேலும் ‘கஜா’ புயல் எதிரொலி காரணமாக பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. நாகை, தஞ்சை, திரு‌வாரூர் மாவட்டம் முழுவதும் பெரும்பாலன இடங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளன. சீரமைப்பு பணியில் 11,000 பேர் ஈடுபட்டுள்ளதாக தமிழக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதால் மின் விநியோகம் விரைவில் கொடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com