புயல் பாதிப்பு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த அவகாசம்..!
புயல் பாதித்த மாவட்டங்களில் மக்கள் அபராதமின்றி மின் கட்டணம் செலுத்த வரும் 30-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
கஜா புயலால் தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, திருவாரூர் என மாவட்டத்தின் பல பகுதிகள் இருந்த இடம் தெரியாமல் உருக்குலைந்துள்ளது. அதனை சீரமைக்கும் பகுதிகளை சீரமைக்கும் பணிகளில் அரசு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இருப்பினும் இன்னும் பல பகுதிகளில் மக்கள் உணவு, நீர் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் புயல் பாதித்த மாவட்டங்களில் மக்கள் அபராதமின்றி மின் கட்டணம் செலுத்த வரும் 30-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இம்மாதம் 15-ஆம் தேதியில் இருந்து 25-ஆம் தேதி வரை, மின் கட்டணம் வேண்டிய நுகர்வோர், அபராதம் இன்றி 30-ஆம் தேதி வரை கட்டணம் செலுத்தலாம் என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.
இதனிடையே புயல் பாதித்த மாவட்டங்களின் நகர்ப் பகுதிகளில் இரண்டு நாட்களிலும், கிராமப் புறங்களில் 15 நாட்களிலும் முழுமையாக மின்சாரம் வழங்கப்படும் என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.