கஜா புயல் பாதிப்பு: களமிறங்கிய ரஜினி மக்கள் மன்றம்

கஜா புயல் பாதிப்பு: களமிறங்கிய ரஜினி மக்கள் மன்றம்

கஜா புயல் பாதிப்பு: களமிறங்கிய ரஜினி மக்கள் மன்றம்
Published on

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ரஜினி மக்கள் மன்றத்தினர் உணவு சமைத்து கொடுத்துள்ளனர்.

தமிழகத்தை அச்சுறுத்திய கஜா புயல் இன்று காலையில் கரையைக் கடந்து தற்போது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. புயல் கரையை கடந்த நேரத்தில் நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. பலத்த புயல் காற்று வீசியதால் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. குடிசை வீடுகள் பல காற்றில் பறந்த நிலையில் மின்கம்பங்களும் ஆங்காங்கே சாய்ந்து விழுந்துள்ளன. தொலைத்தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சார விநியோகமும் தடை செய்யப்பட்டுள்ளது. ஏராளமான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ரஜினி மக்கள் மன்றத்தினர் உணவு சமைத்து கொடுத்துள்ளனர். மயிலாடுதுறையில் புயலின் பாதிப்பை உணர்ந்த மக்கள் தங்களால் முடிந்த உணவுகளை சமைத்து அதனை பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கினர். இதனிடையே கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com