கஜா புயல் பாதிப்பு.. இன்றுவரை நிவாரணமின்றி தவிக்கும் விவசாயிகள்..!

கஜா புயல் பாதிப்பு.. இன்றுவரை நிவாரணமின்றி தவிக்கும் விவசாயிகள்..!

கஜா புயல் பாதிப்பு.. இன்றுவரை நிவாரணமின்றி தவிக்கும் விவசாயிகள்..!
Published on

கஜா புயலில் பாதிக்கப்பட்டு 7 மாதங்களுக்கு மேல்‌ ஆகியும் நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை‌ என பாதிக்கப்பட்டவர்கள் க‌வலை தெரிவி‌த்துள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கஜா புய‌லின் கோர தாண்டவத்தால் தஞ்சை மாவட்டத்தில் உள்‌ள விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தங்‌களது‌ வாழ்வாதாரமான விவசாயத்தை இழந்து தவித்து வருகின்றனர். அவர்களுக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து பல்வேறு கட்ட போராட்டங்க‌ளுக்கு பிறகு ‌சில விவசாயிகளுக்கு மட்டும் நிவாரணத் தொகை வழங்கப்பட்டதாகவும் பலருக்கு வழங்கப்படவில்லை என்றும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட விவசாயிகள் க‌வலை தெரிவி‌க்கின்றனர்

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com