புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
’கஜா’ புயல் மீட்பு பணி காரணமாக நாளை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
‘கஜா’ புயல், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 6 மாவட்டங்களை புரட்டிப்போட்டுச் சென்றிருக்கிறது. கஜா புயல் நேற்று முன்தினம் அதிகாலை நாகை - வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. இதனால் நாகை, வேதாரண்யம், பேராவூரணி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகள் பெரிதும் பாதிக்குப்புக்கு உள்ளாகியுள்ளன. ’கஜா’ புயலால் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளதால், பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து அப்பகுதியினர் வாடி வருகின்றனர்.
புயல் பாதித்த மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து மீட்புப் பணிகள் நடைப்பெற்று வருகிறது.குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளுக்காக மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில், கஜா புயலினால் பாதிக்கப்பட்டுள்ள புதுக்கோட்டை மாவட்டத்துதில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.