கஜா புயல் பாதிப்பு.. இங்கெல்லாம் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!
கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு சில மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை புரட்டிப் போட்டுள்ள கஜா புயலால் ஏராளமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் மின் விநியோகம் தடைபட்டுள்ளது. ஆங்காங்கே மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து கிடக்கின்றன. மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு சில மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிவகங்கை, திருவாரூர் மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேனி, புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல திண்டுக்கல் மாவட்டத்தின் கொடைக்கானல் வட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளனர்.