சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி நியமனம்

சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி நியமனம்

சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி நியமனம்
Published on

சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மே 7ஆம் தேதி மு.க ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றபிறகு, பல பொறுப்புகளுக்கு புதிய அதிகாரிகளை நியமித்து வருகிறார்.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரகாஷ் இடமாற்றம் செய்யப்பட்டு, அந்த இடத்தில் ககன்தீப் சிங் பேடி நியமனம் செய்யப்பட்டுள்ளார். வேளாண் துறை செயலாளராக இருந்த இவர், தற்போது சென்னை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில் பேரிடர் காலங்களில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர். மதுரை மாநகராட்சி ஆணையராகவும் பணியாற்றியுள்ளார். புயல் மற்றும் சவாலான காலகட்டங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஊரக வளர்ச்சித்துறையிலும் மிகுந்த அனுபவம் கொண்டவர் இவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com