\
பாஜகவுடன் த.மா.கா இணைகிறதா? - ஜி.கே.வாசன் பதில்

பாஜகவுடன் த.மா.கா இணைகிறதா? - ஜி.கே.வாசன் பதில்

பாஜகவுடன் த.மா.கா இணைகிறதா? - ஜி.கே.வாசன் பதில்
Published on

பாஜகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் இணையும் என்ற செய்தி வதந்தி என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். 

டெல்லியில் பிரதமர் மோடியை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்து பேசினார். சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்புக்கு பிறகு வாசன் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மத்திய, மாநில அரசுகளின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து மோடியிடம் எடுத்து கூறினேன். தமிழக அரசியல் சூழல் குறித்தும், மரியாதை நிமித்தமாகவும் பிரதமர் மோடியை சந்தித்தேன். இந்த முறை உள்துறை அமைச்சர் அமித்சாவை சந்திக்க திட்டமில்லை.

பாஜகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் இணையும் என்ற செய்தி வதந்தியே. தமிழ் மாநில காங்கிரஸ் தனித்தன்மையுடன் தொடர்ந்து செயல்படும்” எனத் தெரிவித்தார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com