கொரோனாவால் இறந்த பத்திரிகையாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம்: முதல்வர்

கொரோனாவால் இறந்த பத்திரிகையாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம்: முதல்வர்

கொரோனாவால் இறந்த பத்திரிகையாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம்: முதல்வர்
Published on

கொரோனாவால் இறந்த பத்திரிகையாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கொரோனாத் தொற்றால் பல்வேறு துறையைச் சார்ந்தவர்களும் உயிரிழந்து வருகின்றனர். முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் பலர் அடுத்தடுத்து கொரோனா தொற்றுக்கு பலியாகி வருகின்றனர். இந்நிலையில் அனைத்து மாவட்டங்களிலுமுள்ள பதிவு செய்யப்பட்ட, அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், மற்றும் காலமுறை இதழ்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களில் இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் இழப்பீட்டு தொகையாக வழங்கப்பட்டு வந்தது. தற்போது அந்த இழப்பீட்டு தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

அதேபோல் பத்திரிகை, ஊடகவியலாளர்களுக்கான சிறப்பு ஊக்கத்தொகை ரூ.3000இல் இருந்து ரூ.5000ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com