சமயபுரம் கோவிலில் ரூ.14 கோடிக்கு நவீன வளாகம்: அமைச்சர் தகவல்

சமயபுரம் கோவிலில் ரூ.14 கோடிக்கு நவீன வளாகம்: அமைச்சர் தகவல்

சமயபுரம் கோவிலில் ரூ.14 கோடிக்கு நவீன வளாகம்: அமைச்சர் தகவல்
Published on

தமிழகத்தில் பதினெட்டு கோவில்கள் பத்து கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் நடப்பு ஆண்டுக்கான புதிய அறிவிப்புகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வெளியிட்டார். இதன்படி, திருச்சி சமயபுரம் கோவிலில் 13 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் நவீன வளாகம் அமைக்கப்படும் என்று அமைச்சர் அறிவித்தார்.

மேலும், 18 கோயில்கள் 10 கோடியே 68 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்படும் என்றும், திருப்பூர், ஈரோடு, நெல்லை, உள்ளிட்ட 8 கோயில்களில் 4 கோடியே 26 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் புதிய அன்னதானக் கூடங்கள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை ஆரணி, வேட்டவலம், திருநெல்வேலி மாவட்டங்களில் கோயில்களில் பக்தர்கள் வசதிக்கென 3 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பில் திருமண மண்டபங்கள் கட்டப்படும் என்றும் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com