ஜல்லிக்கட்டுக்கு முழு ஆதரவு தெரிவிப்பதாக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஜல்லிக்கட்டை நடத்த தேவையான நடவடிக்கைகளை பிரதமர் மோடி எடுப்பார் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஜல்லிக்கட்டை எதிர்ப்பது இந்தியாவின் பழம்பெருமை மிக்க கலாச்சாரத்தை எதிர்ப்பது போன்றதாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சங்க கால இலக்கியத்தில் ஏறு தழுவுதல் பற்றிய குறிப்புகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக எழுந்துள்ள போராட்டங்கள் கண்டிப்பாக வெற்றி பெறும் என்றும் தருண் விஜய் தெரிவித்துள்ளார்.