முழு ஊரடங்கு: சென்னையில் 10,000 காவலர்கள் தீவிர கண்காணிப்பு

முழு ஊரடங்கு: சென்னையில் 10,000 காவலர்கள் தீவிர கண்காணிப்பு

முழு ஊரடங்கு: சென்னையில் 10,000 காவலர்கள் தீவிர கண்காணிப்பு
Published on

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில், சென்னையில் 10 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த 2 வாரங்களுக்கு முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை பெருநகர் பகுதியில் 35 மேம்பாலங்கள் மூடப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 200 இடங்களில் சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் சார்பிலும், 118 இடங்களில் போக்குவரத்து காவல்துறையினர் சார்பிலும் வாகன தணிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும், 360 ரோந்து வாகனங்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

சென்னை முழுவதும் 10 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக அம்மா உணவகங்கள், ரேசன் கடைகள் உள்பட பல்வேறு முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம், தனிமனித இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உரிய காரணங்களின்றி வாகனங்களில் சுற்றுவோர் மீது நடவடிக்கை எடுக்க வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் சென்னை காவல்துறை கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com