தீபாவளிக்கு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளின் முழு விவரம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 15,16,17 ஆகிய நாட்களில் 22 ஆயிரத்து 756 பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்குச் செல்ல தினசரி இயக்கப்படும் 2,275 பேருந்துகளுடன், கூடுதலாக வரும் 15ஆம் தேதி 788 சிறப்புப் பேருந்துகள், 16ஆம் தேதி 4,119 பேருந்துகள், 17ஆம் தேதி 4,463 பேருந்துகள் என மொத்தம் 11,645 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும் மாநிலத்தின் பிற முக்கிய ஊர்களிலிருந்து 15ஆம் தேதி 1,291 பேருந்துகளும், 16ஆம் தேதி 3,865 பேருந்துகளும், 17ஆம் தேதி 5,955 பேருந்துகள் என மொத்தம் 11,111 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தீபாவளிப் பண்டிகை முடிந்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில், பிற இடங்களிலிருந்து சென்னைக்கு 19ஆம் தேதி முதல், 22ஆம் தேதி வரை 3,794 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும் பிற முக்கிய பகுதிகளிலிருந்து, பல்வேறு பகுதிகளுக்கு 19ஆம் தேதி முதல், 22ஆம் தேதி வரை 7,043 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
* கடந்த ஆண்டுகளைப் போன்றே, 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் செல்லும் சிறப்புப் பேருந்துகளில் பயணிக்க விரும்புவோர் www.tnstc.in என்ற இணைய தளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
* டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் 26 சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட உள்ளது.
* இதேபோல, பூவிருந்தவல்லியில் ஒரு சிறப்பு கவுண்டரும், தாம்பரம் சானடோரியத்தில் 2 சிறப்பு கவுண்டர்களும் அமைக்கப்பட உள்ளன. மொத்தம் 29 சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட உள்ளன.
*இந்த சிறப்பு முன்பதிவு கவுண்டர்கள் வரும் 13ஆம் தேதி முதல் செயல்படும்.
*பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும், இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கும் 044 2479 4709 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.