தமிழ்நாடு
வண்டலூர் பூங்காவில் இருந்து தப்பிய கழுதைப் புலி பிடிபட்டது..!
வண்டலூர் பூங்காவில் இருந்து தப்பிய கழுதைப் புலி பிடிபட்டது..!
வண்டலூர் உயிரியியல் பூங்காவில் கூண்டிலிருந்து இருந்து தப்பிய கழுதைப் புலி பிடிப்பட்டது.
வண்டலூர் உயிரியியல் பூங்காவில் இருந்த கழுதைப்புலி நேற்று இரவு தப்பியோடியதாக ரோந்து பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் தெரிவித்திருந்தனர். அதை கண்டுப்பிடிக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். இரவு முழுவதும் தேடியும் கழுதை புலியை கண்டுபிடிக்க முடியவில்லை. பூங்காவின் சுவர் பல அடி உயரத்துக்கு கட்டப்பட்டிருப்பதால் கழுதைபுலி வெளியில் தப்பி செல்ல வாய்ப்பே இல்லை என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
இதையடுத்து பூங்காவில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இதையடுத்து பூங்கா வளாகத்தில் கழுதைப் புலியை கவர இறைச்சியுடன் கூண்டு வைத்தனர். இறைச்சியை தேடி வந்த கழுதைப் புலி கூண்டில் சிக்கிக்கொண்டது.