அங்கீகாரம் கிடைக்காததால் விரக்தி: விருதுகளை தீயிட்டு கொளுத்திய மயிலாடுதுறை விஞ்ஞானி

அங்கீகாரம் கிடைக்காததால் விரக்தி: விருதுகளை தீயிட்டு கொளுத்திய மயிலாடுதுறை விஞ்ஞானி
அங்கீகாரம் கிடைக்காததால் விரக்தி: விருதுகளை தீயிட்டு கொளுத்திய மயிலாடுதுறை விஞ்ஞானி

உரிய அங்கீகாரம் கிடைக்காததால் விரக்தியில் தனக்கு வழங்கப்பட்ட விருதுகள், கண்டுபிடிப்புக்கான ஆவணங்கள் அனைத்தையும் விஞ்ஞானி ஒருவர் தீயிட்டு கொளுத்தியுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் கடந்த 2009 ஆம் ஆண்டு ஹைடெக் ஆராய்ச்சி நிறுவனத்தை முரளி என்பவர் துவக்கினார். இவரது கண்டுபிடிப்புகளை பார்த்து வியந்த அப்போதைய நாகை மாவட்ட ஆட்சியர், முரளியின் ஆராய்ச்சி பணிகளை தொடர்வதற்காக அவருக்கு கோவிலுக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை வாடகை அடிப்படையில் வழங்கினார்.

அன்றிலிருந்து பன்முக அதிவேக சைக்கிள், பயோ கேஸ் வாகனம், ராணுவ வீரர்களுக்கான ஹாட்& கூல் உடை, தண்ணீரில் இயங்கும் இருசக்கர வாகனம், கொரோனா சிகிச்சைக்காக மலிவு விலை வெண்டிலேட்டர் உள்ளிட்ட 2300 க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை கண்டறிந்தார். இதுவரை அவரது கண்டு பிடிப்புகளுக்காக 128 விருதுகள் மற்றும் தங்கப்பதக்கங்களையும் பெற்றுள்ளார்.

இருப்பினும் தனது கண்டு பிடிப்புகளை மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர அவர் 10 ஆண்டுகளாக போராடி வந்துள்ளார். ஆனால் அவரின் கண்டுபிடிப்புகளுக்கு எந்த உரிமையையும் அரசு கொடுக்க வில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த முரளி தான் பெற்ற 128 விருதுகள், பதக்கங்கள் மற்றும் 2300 கண்டுபிடிப்புகளுக்கான ஆவணங்கள் என அனைத்தையும் தீயிட்டு கொளுத்தியுள்ளார்.

இது குறித்து முரளியிடம் பேசிய போது அவர் கூறியதாவது, “எனது கண்டுபிடிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்குமாறு கடந்த 10 ஆண்டுகளாக போராடி வருகிறேன். ஆனால் அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் அனைத்தும் தொடங்கிய இடத்திலேயே இருக்கிறது. சரி என்னுடைய கண்டுபிடிப்புகளை நானே உருவாக்கலாம் என தனியார் வங்கி ஒன்றில் கடன் கேட்டேன். அவர்கள் முதலில் வங்கிக் கடன் தருவதாக கூறி கடன் தொகையில் ஒரு குறிப்பிட்டத் தொகையை இரண்டு தவணைகளாக கொடுத்தனர். மீதமுள்ள கடன் தொகையை தரவில்லை.

திடிரென்று எங்கள் மீது அவர்கள் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இது மட்டுமல்லாமல் தினமும் எங்கள் ஆராய்ச்சி கூடத்திற்கு வரும் சில வங்கி அதிகாரிகள், கடன் மற்றும் அதற்கான வட்டித்தொகையை உடனடியாக திருப்பித் தரவேண்டும் என்றும் இல்லை என்றால் உங்களது ஆராய்ச்சிக்கூடத்தை நாசாமாக்கி விடுவோம் என்றும் கூறி மிரட்டி வருகின்றனர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகிறேன்.

அதே போல ஆட்சியர் எனக்கு வாடகைக்கு வழங்கிய இடத்தையும் கோவில் நிர்வாகம் திருப்பித் தருமாறு நெருக்கடி கொடுக்கின்றனர். அதனால் இன்றோடு எனது ஆராய்ச்சி பணிகளை கைவிடுகிறேன். இதுவரை உருவாக்கிய பொருட்களை பள்ளி கல்லூரிகளுக்கு வழங்க இருக்கிறேன்” என்று தெரிவித்தார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com