தமிழ்நாடு
பழக்கடைகளுக்கு அனுமதி - தொழில்சார் சிக்கல்களுக்கு சேவை மையம் அறிவிப்பு
பழக்கடைகளுக்கு அனுமதி - தொழில்சார் சிக்கல்களுக்கு சேவை மையம் அறிவிப்பு
பழக்கடைகள், நாட்டு மருந்துக் கடைகளும் இயங்கலாம் - தமிழக அரசு அறிவிப்பு. பழக்கடைகள், நாட்டு மருந்துக் கடைகளும் இயங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
முழு ஊரடங்கு காலத்தில் தொழிற்சாலைகளில் பிற பராமரிப்பு பணிகளை ஒரு நாள் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குறைந்த அளவிலான பணியாளர்களுடன் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தொடர் உற்பத்தி ஆலைகள், அத்தியாவசிய பொருள் உற்பத்தி ஆலைகளின் சிக்கல்களை களைய சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தொழில் வழிகாட்டி மைய அலுவலகத்தில் சேவை மையம் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 9677107722, 9994339191, 7823928262 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.