தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்திற்கு உறைபனி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுweb
தமிழ்நாடு
நீலகிரிக்கு உறைபனி எச்சரிக்கை.. தமிழ்நாட்டில் வெப்பநிலை குறையும்!
தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்திற்கு உறைபனி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..
Summary
குளிர் கால மாதங்கள் தொடங்கியிருக்கும் சூழலில் தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்திற்கு உறைபனி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்திற்கு உறைபனிக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில், இரவு அல்லது அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி
அதேபோல வரும் 24ஆம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் குறைந்தபட்ச வெப்பநிலையானது, இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறைவாக இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

