தமிழ்நாடு
வரியை உயர்த்தியது தமிழக அரசு: நாளை முதல் விலை உயர்கிறது மதுபானம்!
வரியை உயர்த்தியது தமிழக அரசு: நாளை முதல் விலை உயர்கிறது மதுபானம்!
இந்தியத் தயாரிப்பு அயல்நாட்டு மதுபானத்தின் மீது விதிக்கப்படும் ஆயத்தீர்வை வரியினை தமிழக அரசு 15% உயர்த்தியுள்ளது. இதனால் மதுபானத்தின் விலை உயர்கிறது
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, இந்தியத் தயாரிப்பு அயல்நாட்டு மதுபானத்தின் மீது விதிக்கப்படும் ஆயத்தீர்வை வரியினை தமிழக அரசு 15% உயர்த்தியுள்ள காரணத்தினால்,
சாதாரண வகை 180மிலி மதுபான பாட்டிலின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை ரூ,10 கூடுதலாகவும், நடுத்தர மற்றும் ப்ரீமியம் வகை 180மிலி மதுபான பாட்டிலின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை ரூ.20 கூடுதலாகவும் 7.5.2020 முதல் உயர்த்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் நிறுவனத்தின் இந்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.