#TopNews பிரதமர் மோடியின் ஆலோசனை முதல் மு.க.ஸ்டாலினின் கேள்வி வரை...!

#TopNews பிரதமர் மோடியின் ஆலோசனை முதல் மு.க.ஸ்டாலினின் கேள்வி வரை...!

#TopNews பிரதமர் மோடியின் ஆலோசனை முதல் மு.க.ஸ்டாலினின் கேள்வி வரை...!
Published on

கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை. மருத்துவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டுவர மத்திய
அமைச்சரவை ஒப்புதல்.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்படுமா? மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி வருகிற 27-ஆம் தேதி ஆலோசனை. 

கொரோனா தடுப்புப் பணியில் உயிரிழக்க நேரிடும் அரசுத் துறையினருக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு. குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி
அறிவிப்பு.

மருத்துவர்களை காக்க முடியாத அரசு மக்களை எப்படி காக்கும் என மு.க.ஸ்டாலின் கேள்வி. மருத்துவர்கள் போராடும் நிலை கொரோனாவை விடக் கொடூரமானது என்றும் விமர்சனம். 

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 471ஆக உயர்வு. சிகிச்சையில் 3 ஆயிரத்து 960 பேர் குணமடைந்ததால் பெருகும் நம்பிக்கை.

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்து 629 ஆக உயர்வு. புதிதாக வைரஸ் தொற்று தாக்கிய 33 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.

 ரேஷனில் மே மாத பொருள்களை வாங்க 24, 25 ஆம் தேதிகளில் வீடு வீடாக டோக்கன் வழங்கப்படும். கூட்டம் கூடுவதைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com