\
“சென்னை தொடங்கி கடலூர் வரை மீண்டும் இன்று இரவு முதல் மழை” – பிரதீப் ஜான்

“சென்னை தொடங்கி கடலூர் வரை மீண்டும் இன்று இரவு முதல் மழை” – பிரதீப் ஜான்

“சென்னை தொடங்கி கடலூர் வரை மீண்டும் இன்று இரவு முதல் மழை” – பிரதீப் ஜான்
Published on

சென்னை தொடங்கி கடலூர் வரை மீண்டும் இன்று இரவு முதல் காலை வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக தெரிவித்திருக்கும் பிரதீப் ஜான், “ தற்போதே பல பகுதிகளிலும் மழை பெய்யும் நிலையில் இரவில் தீவிரம் அதிகரிக்கும். கடலூர் செங்கல்பட்டு விழுப்புரத்தில் கனமழை பெய்யும், 10 செமீக்கும் அதிகமாக நாளையும் மழை பதிவாகும். அடுத்த வாரம், அதற்கு அடுத்த வாரம் என இரண்டு தாழ்வு பகுதிகள் உருவாகும் என்பதால் கன மழை நீடிக்க வாய்ப்பு உள்ளது” என கூறியிருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com