அதிமுகவின் தேர்தல் அறிக்கை முதல் பாஜக வேட்பாளர் அறிவிப்பு வரை - இன்றைய முக்கிய செய்திகள்

அதிமுகவின் தேர்தல் அறிக்கை முதல் பாஜக வேட்பாளர் அறிவிப்பு வரை - இன்றைய முக்கிய செய்திகள்
அதிமுகவின் தேர்தல் அறிக்கை முதல் பாஜக வேட்பாளர் அறிவிப்பு வரை - இன்றைய முக்கிய செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகளை இந்தக்கட்டுரையில் பார்க்கலாம்.  

1. 1.163 அம்சங்கள் கொண்ட அதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாகியுள்ள நிலையில், அதில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வாஷிங் மெஷின், வீட்டில் ஒருவருக்கு அரசுப்பணி உள்ளிட்ட பலதரப்பட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. 

2. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்கின்றனர். தேர்தல் பரப்புரை பயணத்தையும் ஒரேநாளில் தொடங்குகின்றனர்.

3. 17 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டது.

4. திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த டாக்டர் சரவணனுக்கு மதுரை வடக்கு தொகுதியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. காரைக்குடி தொகுதியில் ஹெச்.ராஜாவும், அரவக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலையும் போட்டியிடுகின்றனர்.

5. அமமுக கூட்டணியில் 60 தொகுதிகளில் தேமுதிக போட்டியிடுகிறது. விஜயகாந்த் தனித்து நின்று வெற்றிபெற்ற விருத்தாசலத்தில் பிரேமலதா போட்டியிடுகிறார்.

6. ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவித்தது. வானூரில் வன்னியரசு, நாகையில் ஆளூர் ஷாநவாஸ் களம் காண்கின்றனர்.

7. திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் களமிறங்கும் 6 வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. தளி தொகுதியில் ராமச்சந்திரனும் சிவகங்கை தொகுதியில் குணசேகரனும் களம் காண்கின்றனர்.

8. தஞ்சை அருகே ஒரே பள்ளியில் 56 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், இரு வாரங்களுக்கு பள்ளி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

9. ஒலிம்பிக் போட்டிக்கு வாள்சண்டை பிரிவில் முதல் இந்தியராக வீராங்கனை பவானி தேவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

10. இங்கிலாந்து அணியுடனான இரண்டாவது ட்வெண்டி ட்வெண்டி கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றியை வசமாக்கியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com