காதலியை அழைத்து சென்ற நண்பன்: போலீசார் விசாரணைக்கு பயந்த மாணவன் தற்கொலை?

காதலியை அழைத்து சென்ற நண்பன்: போலீசார் விசாரணைக்கு பயந்த மாணவன் தற்கொலை?

காதலியை அழைத்து சென்ற நண்பன்: போலீசார் விசாரணைக்கு பயந்த மாணவன் தற்கொலை?
Published on

நண்பன் காதலியோடு சென்றுவிட்டதால், போலீஸார் தன்னையும் விசாரிப்பார்கள் என பயந்த மாணவர் ஒருவர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது

பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த செல்லமுத்து என்பவரின் மகன் கார்த்திகேயன். இவர் ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் டிப்ளமோ ஆட்டோ மெக்கானிக்கல் இரண்டாமாண்டு பயின்று வந்தார். இந்நிலையில் கார்த்திகேயனின் நண்பர் ஒருவர் அவரது காதலியுடன் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் காதலியின் நண்பரான தன்னையும் போலீஸார் விசாரிக்கக் கூடும் என அச்சமடைந்த கார்த்திகேயன் பூலாம்பாடி பேரூராட்சிக்கு சொந்தமான குடிநீர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.

தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த அரும்பாவூர் காவல்துறைனர் மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடலை மீட்டபோது கார்த்திகேயன் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. தற்கொலை செய்துகொண்ட கார்த்திகேயனுக்கு மூன்று சகோதரிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com