\
வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: வானிலை ஆய்வு மையம்

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: வானிலை ஆய்வு மையம்

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: வானிலை ஆய்வு மையம்
Published on: 

வங்கக்கடலில் வரும் 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

வங்கக் கடலில் கடந்த 21ம் தேதி உருவான நிவர் புயலானது நேற்று கரையைக் கடந்தது. இந்நிலையில் வங்கக்கடலில் வரும் 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இது 30ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக டிசம்பர் 1முதல் 3 ம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்றும், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போதைய நிலவரப்படி புயலாக மாற வாய்ப்பில்லை என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com