‘கைலாசா’வுக்கு 3 நாட்கள் இலவச விசா: நித்யானந்தா அறிவிப்புக்கு குவியும் மீம்ஸ்!

 ‘கைலாசா’வுக்கு 3 நாட்கள் இலவச விசா: நித்யானந்தா அறிவிப்புக்கு குவியும் மீம்ஸ்!

 ‘கைலாசா’வுக்கு 3 நாட்கள் இலவச விசா: நித்யானந்தா அறிவிப்புக்கு குவியும் மீம்ஸ்!
Published on

கைலாசாவில் தங்கும் மூன்று நாட்களும் இலவச உணவு, தங்குமிடம் போன்றவை வழங்கப்படும் என்றும், கைலாசாவுக்கு வருகைதர விரும்புவோர் தற்போதிலிருந்தே மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்றும் நித்யானந்தா அறிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக வீடியோ மூலமாக பேசிய நித்யானந்தா, கைலாசா நாட்டுக்கு வர விரும்புபவர்கள் தங்களின் முழுத்தகவல்களுடன், 3 நாட்கள் இலவச விசாவுக்கு இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்றும், கைலாசா வரவிரும்புவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வந்துவிட்டால் அங்கிருந்து ‘கருடா’ எனப்பெயரிடப்பட்டுள்ள சிறிய தனி விமானங்கள் மூலமாக இலவசமாக அழைத்து செல்லப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.

மேலும் கைலாசாவில் தங்கும் 3 நாட்களுக்கும் தங்குமிடம், உணவு உள்ளிட்ட அனைத்தும் இலவசம் எனவும், மேலும் கைலாசாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு திரும்ப வரும் வரை பயணச்செலவும் இலவசம் எனவும் கூறினார்

கைலாசாவுக்கு வருகை தருபவர்கள் அனைவரும் மூன்று நாட்கள் மட்டுமே கைலாசாவில் தங்க முடியும். சிவனை வழிபடும் சிவ பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். மூன்று நாட்களில் ஒரு நாள் மட்டுமே நித்யானந்தாவை தரிசிக்கமுடியும், ஒரு நாளைக்கு 25 பேர் மட்டுமே கைலாசாவுகு வரமுடியும் என்பன போன்ற கட்டுப்பாடுகளை அவர் விதித்துள்ளார்.

வழக்கம்போலவே நித்யானந்தாவின் இந்த அறிவிப்பும், நெட்டிசன்கள் மத்தியில் மீம் கன்டென்ட்டாக உருவெடுத்துள்ளது. 

பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள நித்யானந்தா, அவ்வப்போது அதிரடியான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். ஓராண்டுக்கும் மேலாக கைலாசா நாடு பற்றிய தொடர் அறிவிப்புகளை வெளியிட்டுவரும் அவர், தற்போது இந்த அறிவிப்பினையும் வெளியிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com