ஆசிரியர்களுக்கு இலவச மடிக்கணினி: பள்ளிக்கல்வி துறை உத்தரவு

ஆசிரியர்களுக்கு இலவச மடிக்கணினி: பள்ளிக்கல்வி துறை உத்தரவு

ஆசிரியர்களுக்கு இலவச மடிக்கணினி: பள்ளிக்கல்வி துறை உத்தரவு
Published on

11 மற்றும் 12ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு வகுப்பு வாரியாக மடிக்கணினி வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதே போல், கல்வி இயக்குநர், இணை இயக்குநர், இயக்கக அலுவலர்கள், 32 மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் இலவச மடிக்கணினி வழங்க பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டுள்ளது. 

புதிய பாடப்புத்தகங்களில் உள்ள QR Code-ஐ பயன்படுத்தி கற்பிக்கவும், இணையதளத்தைப் பயன்படுத்தி கற்பிக்கவும் ஏதுவாக 11 மற்றும் 12ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்டத்தில் உள்ள வகுப்பறையின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு, இணையதளத்தில் உள்ள தரவுகளின் படி ஆசிரியர்களுக்கு உடனே மடிக்கணினி வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ‌

மேலும் வழங்கப்பட்ட மடிக்கணினிகளின் விவரத்தையும், மீதமுள்ள மடிக்கணினிகளின் எண்ணிக்கையையும் இயக்குநரகத்துக்கு அனுப்ப அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com