\
மீனாட்சி அம்மன் கோயிலில் நாளை முதல் இலவச லட்டு பிரசாதம்!

மீனாட்சி அம்மன் கோயிலில் நாளை முதல் இலவச லட்டு பிரசாதம்!

மீனாட்சி அம்மன் கோயிலில் நாளை முதல் இலவச லட்டு பிரசாதம்!
Published on: 

உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நாளை முதல் இலவசமாக லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. 

மதுரையில் உலக புகழ்பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக 30 கிராம் லட்டு இலவசமாக வழங்கப்படவுள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள், மீனட்சி அம்மனை தரிசித்துவிட்டு, சொக்கநாதரை தரிசிக்கச் செல்லும் வழியில் முக்குறுணி விநாயகர் சந்நிதி அருகே, பக்தர்களுக்கு இந்த இலவச லட்டு பிரசாதம் வழங்கப்படவுள்ளது.

கோயில் நடை திறந்தது முதல் இரவு நடை அடைக்கப்படும் வரை லட்டு பிரசாதம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இத்திட்டத்தை தொடங்கி வைக்கிறார்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com