300 மாணவர்களுக்கு இந்தாண்டும் இலவச உயர்கல்வி - பாரிவேந்தர் எம்.பி அறிவிப்பு

300 மாணவர்களுக்கு இந்தாண்டும் இலவச உயர்கல்வி - பாரிவேந்தர் எம்.பி அறிவிப்பு
300 மாணவர்களுக்கு இந்தாண்டும் இலவச உயர்கல்வி - பாரிவேந்தர் எம்.பி அறிவிப்பு

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 300 மாணவர்களுக்கு எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் இந்தாண்டும் இலவச உயர்கல்வி வழங்கப்படும் என்று பாரிவேந்தர் எம்.பி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனருமான டாக்டர் பாரிவேந்தர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் 2019 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 3 வருடங்களாக பொறியியல், கலை-அறிவியல், விவசாயன், உணவக மேலாண்மை போன்ற பல்வேறு பாடப்பிரிவுகளில் அவரது தொகுதிக்குட்பட்ட 900 மாணவ-மாணவியர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் இலவச உயர்கல்வி பயின்று பயனடைந்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக 4வது ஆண்டாக இந்த கல்வியாண்டும் (2022-23) இலவச உயர்கல்வி பயில்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரும் 3ஆம் தேதி முதல் காலை 11 மணி முதல் 12 ஆம் தேதி மாலை 6 மணிக்குள் ஏழ்மை நிலையிலுள்ள தகுதியுள்ள மாணவர்கள் www.srmist.edu.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com