சென்னையில் மே 17 வரை அம்மா உணவகங்களில் இலவச உணவு - மாநகராட்சி அறிவிப்பு

சென்னையில் மே 17 வரை அம்மா உணவகங்களில் இலவச உணவு - மாநகராட்சி அறிவிப்பு
சென்னையில் மே 17 வரை அம்மா உணவகங்களில் இலவச உணவு - மாநகராட்சி அறிவிப்பு

சென்னையில் மே 17 வரை அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா வைரஸ் தொடர்பான அறிவிப்புகளை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி தமிழகத்தில் நேற்று மட்டும் 266 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3023 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதனிடையே தமிழத்தில் உள்ள பல்வேறு அம்மா உணவகங்களில் ஊரடங்கு அறிவித்த நாள் முதல் இலவச உணவு வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில், தற்போது மே 3 லிருந்து மே 17 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி மே 17 வரை சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் இலவச உணவு வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. முன்னதாக, இன்று காலை முதல் அம்மா உணவகங்களில் கட்டணம் வசூலிக்க தொடங்கினர். ஆனால், இலவசமாக உணவு வழங்க வேண்டும் என அம்மா உணகத்தை நம்பி இருக்கும்பலர் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com