ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவசமாக முதலுதவி பெட்டி - விழிப்புணர்வு ஏற்படுத்திய சென்னை காவல்துறை

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவசமாக முதலுதவி பெட்டி - விழிப்புணர்வு ஏற்படுத்திய சென்னை காவல்துறை

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவசமாக முதலுதவி பெட்டி - விழிப்புணர்வு ஏற்படுத்திய சென்னை காவல்துறை
Published on

சென்னை போக்குவரத்து காவல்துறைனர் ஆட்டோ ஓட்டுர்களுக்கு இலவசமாக முதலுதவி பெட்டி அளித்து அதன் அவசியத்தை உணர்த்தினர். 

சென்னையில் ஆட்டோ ஓட்டுநர்கள், வேன் ஓட்டுநர்களுக்கு வேப்பேரி போக்குவரத்து காவல்துறையினர் வாகனங்களில் பொருத்தும்படியான இலவசமாக முதலுதவி பெட்டிகளை வழங்கினர். புரசைவாக்கத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற செயிண்ட் ஜான்ஸ் ஆம்புலன்ஸ் அசோசியேசன் முன்னாள் தலைவர் ஜெகதீசன் வாகன ஓட்டுநர்களுக்கு முதலுதவி பெட்டிகளை வழங்கியதோடு, முதலுதவி பெட்டியை கையாளும் முறை குறித்தும், அதன் அவசியம் குறித்தும் அவர் விவரித்தார்.

இது குறித்து ஆட்டோ ஓட்டுநர்கள் கூறும் போது, “ எல்லா ஆட்டோ ஓட்டுநர்களும் கண்டிப்பாக முதலுதவி பெட்டி தங்களுடைய ஆட்டோக்களில் வைத்திருக்க வேண்டும். அதன் முக்கியத்துவத்தை தெரிந்து கொண்டுள்ளோம். போக்குவரத்து காவல்துறைக்கு நன்றி. போக்குவரத்து காவல்துறையினர் அளித்த புத்தகத்தை மூலம் முதலுதவி சிகிச்சையின் முக்கியத்துவத்தை தெரிந்து கொண்டுள்ளோம் என்றனர்.

இந்நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள், போக்குவரத்து துறையினர் பங்கேற்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com