\
இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடரும் - மின்சார வாரியம்

இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடரும் - மின்சார வாரியம்

இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடரும் - மின்சார வாரியம்
Published on

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடரும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாலம், திட்டக்குடி பகுதியில் விவசாயப் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் புதிய மின் இணைப்பிற்கு மீட்டர்கள் பொருத்தப்பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மின் மீட்டர்கள் பொருத்தப்படுவதால் இலவச மின்சாரம் பறிபோகும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.

இந்நிலையில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடரும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், விவசாயப் பயன்பாட்டிற்கு எவ்வளவு மின்சாரம் செலவிடப்படுகிறது என்பதை அளவிட மட்டுமே மின்மீட்டர்கள் பொருத்தப்படுவதாகவும், இலவச விவசாய மின் இணைப்பு தரும்போது மீட்டர் பொருத்துவது 2 ஆண்டுகளாகவே நடைமுறையில் உள்ளது என்றும் அரசு தெரிவித்துள்ளது

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com