\
விலை உயர்ந்தாலும் பள்ளியில் முட்டை வழங்கப்படும்: கடம்பூர் ராஜு

விலை உயர்ந்தாலும் பள்ளியில் முட்டை வழங்கப்படும்: கடம்பூர் ராஜு

விலை உயர்ந்தாலும் பள்ளியில் முட்டை வழங்கப்படும்: கடம்பூர் ராஜு
Published on

விலை உயர்ந்தாலும் பள்ளியில் தொடர்ந்து மாணவர்களுக்கு முட்டை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார் அமைச்சர். 

முட்டை கொள்முதல் விலை உயர்வு காரணமாக பள்ளிகளுக்கு சத்துணவுத்திட்டத்தில் முட்டை வழங்கப்படவில்லை என புகார் எழுந்தது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக, சமூகநலத்துறை உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றது புதிய தலைமுறை. இந்தக் குற்றச்சாட்டுக் குறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய  செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, “முட்டை விலை மட்டுமின்றி எந்த‌ப் பொருட்களின் விலை உயர்ந்தாலும் தொடர்ந்து சத்துணவு வழங்கப்படும் என்றும் மேலும் சத்துணவு திட்டம் மெருகேற்றப்படும் என்றும் விலை உயர்ந்தாலும் தொடர்ந்து முட்டை வழங்கப்படும் என்றும் அது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.


 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com