திருநங்கைகளுக்கு இலவச கல்வி: தமிழக அரசு திட்டம்
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடப்பிரிவுகளிலும் சேரும் திருநங்கைககளுக்கு இலவசமாக கல்வி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற உயர் கல்வித்துறை மானியக் கோரிக்கையில் இதற்கான அறிவிப்பை துறையின் அமைச்சர் கே.பி. அன்பழகன் வெளியிட்டார். மேலும், கல்வியில் சிறந்த திருநங்கைகளுக்கு ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அண்ணா பல்கலைக்கழகத்துக்கு 4 மாதத்தில் துணைவேந்தர் நியமிக்கப்படுவார் என்று கூறிய அவர், அதற்காக தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 1,966 உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவித்த அமைச்சர், உயர் கல்வியில் 3 முதுகலை படிப்புகள், 5 பட்ட படிப்புகள் உட்பட 22 புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.