இனி சென்னை மெட்ரோக்களில் 'இலவச சைக்கிள் சேவை'

இனி சென்னை மெட்ரோக்களில் 'இலவச சைக்கிள் சேவை'
இனி சென்னை மெட்ரோக்களில் 'இலவச சைக்கிள் சேவை'

கொச்சி மெட்ரோவை முன்மாதிரியாகக் கொண்டு, சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில், பயணிகளின் வசதிக்காக 'இலவச சைக்கிள் சேவை' திட்டம் தொடங்கப்பட உள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் சேவையில், தொடர்ந்து பல சேவைகள் மேம்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் 'இலவச சைக்கிள் சேவை' தொடங்கப்பட உள்ளது. ரயில் நிலையங்களிலிருந்து 5 கி.மீ. தொலைவுக்குள் உள்ள பகுதிகளுக்கு, இந்த சைக்கிள் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலவச சைக்கிள் சேவையைப் பயன்படுத்த விரும்பும் மக்கள், தங்கள் செல்போன் எண்ணை ரயில் நிலையங்களில், விரைவில் அறிவிக்கப்பட இருக்கும் மொபைல் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்ப வேண்டும். பதிலாக வரும் பாஸ்வேர்டு எண்ணை, ரயில் நிலையத்தில் உள்ள சைக்கிள் நிலையத்தில் காண்பித்து, சைக்கிளை எடுத்துக் கொள்ளலாம். மீண்டும் அதே ரயில் நிலையத்திலேயே சைக்கிளை திரும்ப ஒப்படைக்கவேண்டிய அவசியமில்லை. அருகில் இருக்கும் எந்த ரயில் நிலையத்தில் வேண்டுமானாலும் ஒப்படைக்கலாம்.

கேரளா மாநிலத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த மெட்ரோ சேவையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது தமிழகத்திலும் இந்தத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com