டெலகிராம் ஆப் மூலம் தரப்படும் டாஸ்க்குகள்.. மோசடி செய்த ஒருவர் கைது.. எச்சரிக்கை!!

டெலகிராம் ஆப் மூலம் தரப்படும் டாஸ்க்குகளை முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் பெறலாம் எனக்கூறி 54 லட்சம் ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்ட இளைஞரை சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்தனர்.
டெலகிராம்
டெலகிராம் முகநூல்

டெலகிராம் ஆப் மூலம் தரப்படும் டாஸ்க்குகளை முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் பெறலாம் எனக்கூறி 54 லட்சம் ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்ட இளைஞரை சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்தனர். ஆவடி இணைய வழி குற்றப்பிரிவுn காவல்துறைக்கு இருவேறு இணைய மோசடி குறித்த புகார்கள் பெறப்பட்டன.

அதன்படி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அபிதா என்ற பெண், டெலகிராம் ஆப் வழியாக பெறப்பட்ட லிங்க் மூலம் அடையாளம் தெரியாத நபர்களிடம் பகுதி நேர வேலை பெற்று பணி செய்து வந்துள்ளார்.

தொடக்கத்தில் குறைந்த அளவு கமிஷன் தொகையை அனுப்பி ஆசை காட்டிய கொள்ளையர்கள், அடுத்தடுத்து கமிஷன் தொகையைப் பெற தங்களின் வங்கிக் கணக்கு பணம் அனுப்ப வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

அதை நம்பி அபிதா 35 லட்சம் ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்குக்கு அனுப்பியுள்ளார். இதேபோல் காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஜூட் சுசில் அல்போன்ஸ் என்பவரும், கமிஷன் தொகையைப் பெற சுமார் 19 லட்சத்து 56 ரூபாயை அனுப்பியுள்ளார்.

டெலகிராம்
சோளிங்கர்: ரேஷன் கார்டு இல்லாததால் பிரிந்துசென்ற மனைவி; 35 ஆண்டுகளாக மனுவுடன் போராடும் கணவன்!

இதையடுத்து குற்றவாளிகளைத் தனிப்படை அமைத்துத் தேடி வந்த காவல்துறையினர், பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரைக் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் இதேபோல் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களையும் ஏமாற்றி, கோடிக்கணக்கான ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்தது தெரியவந்தது. மேலும் தலைமறைவாக உள்ளவர்களையும் இணைய வழி குற்றப்பிரிவு காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com