சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூர் பகுதியில் வசித்து வருபவர் ரத்தினம்(45). இவர் தான் ஒரு மத்திய அரசின் முக்கிய பதவியில் உள்ள அரசு அதிகாரி என்றும் தனக்கு கீழ் தான் அனைத்து ஆட்சியர்களும் வருவார்கள் எனக் கூறி எழும்பூரில் உள்ள தனியார் வங்கியில் (கோட்டாக் மகேந்திரா) 31 லட்சம் கடன் பெற்றுள்ளார். பின்னர் அந்த கடனை முறைப்படி திரும்ப செலுத்தாததால் வங்கியின் மேலாளர் சண்முகராஜா கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த கானாத்தூர் போலீசார் ரத்தினத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். காவல்துறையின் விசாரணையில் ரத்தினம் போலி அதிகாரி என தெரியவந்துள்ளது.